Blog

சந்திராஷ்டமம் – தெரிந்து கொள்வோம்

ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும் சந்திரன், எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும் இரண்டேகால் நாட்களைத்தான் சந்திராஷ்டமம் என்கிறோம். ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும். சந்திராஷ்டம தினங்களில் நமது யோசிக்கும் திறன் மந்தமாக இருப்பதாக கருதப்படுகிறது… இந்நாட்களில் முக்கியமான விஷயங்களில் நாம் தவறான முடிவு எடுப்பதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளதாக கூறுவர். சந்திராஷ்டம நாட்களில் செய்ய கூடாதவை சந்திராஷ்டம நாள்களில் தொடங்கும் காரியங்கள் பிரச்னைகளைத் தருவதுடன்,Read More

ஶ்ரீராமநவமி-சிறப்புக்களும் பெருமைகளும்

ஶ்ரீராமநவமி என்றால் என்ன? ஶ்ரீராமபிரான் இப்புவியில் அவதரித்த நாளே ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்… இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி வேண்டினர். அப்போது விஷ்ணு பகவான், ‘அஷ்டமி, நவமி இரண்டையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார். அதன்படியேRead More

முருகனின் அறுபடை வீடுகள்-திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் -சுப்பிரமணிசுவாமி கோயில் திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஒரு குகைக்கோவிலாகும். ஆரம்பத்தில் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்தது…  இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர்.  எனவே “திருப்பிய பரங்குன்றம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் மருவி “திருப்பரங்குன்றம்” ஆனதாக கூறுவர். சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன்Read More

கனகதாரா ஸ்தோத்திரம்

ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் சிறப்பு ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம்Read More

முருகனின் அறுபடை வீடுகள்-சுவாமிமலை

சுவாமி மலை – சுவாமிநாதசுவாமிகோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் சுவாமிமலையும் ஒன்று. சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்றே குறிப்பிடுகின்றன. ‘ஏர்’ என்றால் அழகு; ‘அகம்’ என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். சிவபெருமானே, முருகனிடம் சீடனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை கேட்டுத் தெரிந்து கொண்டது இந்த தலத்தில்தான்… முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவன், தன் மகனை ‘நீயே சுவாமி!’Read More

முருகனின் அறுபடை வீடுகள்-திருச்செந்தூர்

திருச்செந்தூர்- சுப்பிரமணியசுவாமி கோயில் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகின்றது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள திருக்கோயில் இதுவாகும். தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால், செயந்திநாதர் என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் “செயந்தி நாதர்” என்பது செந்தில்நாதர் எனவும், “திருஜெயந்திபுரம்” என்பது, திருச்செந்தூர் எனவும் மருவியது. திருச்செந்தூர் ஆலயம், ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்துRead More

முருகனின் அறுபடை வீடுகள் – திருத்தணி

திருத்தணி – சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் முருகன், வேடனாகி, விருத்தனாகி, வேங்கை மரமாகி, விநாயகப் பெருமான் அருளால் வள்ளியை மணந்து வள்ளிமணாளனாக திருத்தணிகையில் எழுந்தருளினார். முருகப்பெருமான் சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து, சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம், அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால்Read More

முருகனின் அறுபடை வீடுகள் – பழனி

பழனி-தண்டாயுதபாணிசுவாமி கோயில் முருக பெருமான் திருஆவினங்குடியில் மலையாடிவரத்தில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார், சேரமான் பெருமான் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் நடந்தன. பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்பழனிமலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. போகர் சித்தர் வடித்த நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையே பழனிமலைக்கோவிலின் மூலவர்Read More

பிரதோஷத்தின் பெருமைகள் !!!

பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகாலRead More

ஶ்ரீராமநவமி

“ஶ்ரீராமநவமி அன்று விரதமிருந்து வழிபடுவோம்!ஸ்ரீராமரின் அருளை பெற்றிடுவோம்!” ஸ்ரீராம நாமத்தை உச்சரிப்பதால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். ஶ்ரீராமநவமி நாளில் விரதமிருந்து இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு. ஶ்ரீராமநவமி விரதம் மேற்கொள்வதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.