சந்திராஷ்டமம் – தெரிந்து கொள்வோம்

ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும் சந்திரன், எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும் இரண்டேகால் நாட்களைத்தான் சந்திராஷ்டமம் என்கிறோம்.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

சந்திராஷ்டம தினங்களில் நமது யோசிக்கும் திறன் மந்தமாக இருப்பதாக கருதப்படுகிறது…

இந்நாட்களில் முக்கியமான விஷயங்களில் நாம் தவறான முடிவு எடுப்பதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளதாக கூறுவர்.

சந்திராஷ்டம நாட்களில் செய்ய கூடாதவை

சந்திராஷ்டம நாள்களில் தொடங்கும் காரியங்கள் பிரச்னைகளைத் தருவதுடன், காரிய வெற்றியையும் தருவதில்லை என்பர்

சுபமான நிகழ்வுகளை சந்திராஷ்டம காலங்களில் நடத்த பரிந்துரைக்கப்படுவதில்லை.

இக்காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்காமல் ஒத்தி வைக்கலாம்.

கடன் கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கலாம்.

சந்திராஷ்டம பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

முக்கிய நிகழ்வுகளுக்கு நல்ல நாள் பார்க்கும்போது, தன்னுடைய ராசிக்கு சந்திராஷ்டம நாளா என்று பார்ப்பது அவசியம்.

இந்நாட்களில் வீண்பேச்சைக் குறைத்து இறைவனை மனதில் வழிபட்டு தியானித்தல் நல்ல பலன்களைத் பெறலாம்.

திருமண முகூர்த்தநாள் குறிக்கும் போது, மணமக்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் அல்லாத நாளாக இருத்தல் அவசியம் .

ஒரு புதிய நல்லகாரியத்தில் ஈடுபடும்போது, அந்த காரியத்துக்கு உரியவருடைய ராசிக்கு மட்டும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருந்தால் போதுமானது.

தவிர்க்க முடியாத சூழலில், விநாயகர் அல்லது அம்பிகைக்கு பாலபிஷேகம், அர்ச்சனை செய்து,  சந்திராஷ்டமத்தன்று கூட, புதிய காரியத்தைத்  தொடங்கலாம் என்பது நம்பிக்கை.