முருகனின் அறுபடை வீடுகள் – பழனி

பழனி-தண்டாயுதபாணிசுவாமி கோயில்

முருக பெருமான் திருஆவினங்குடியில் மலையாடிவரத்தில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார், சேரமான் பெருமான் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் நடந்தன.

பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்பழனிமலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.

போகர் சித்தர் வடித்த நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையே பழனிமலைக்கோவிலின் மூலவர் தண்டபாணி தெய்வமாக வணங்கப்படுகிறதுமூலவர் ஆண்டிக் கோலத்தில் அருளுகிறார்.

தினமும் இரவு இவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது.தினமும் இரவில் மூலவரான தண்டாயுதபாணி சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்படுகிறது.. இதுவே மறுநாள் காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

முருகன்  சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது, கையில் தண்டம் வைத்திருந்ததால் ‘தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார். முருகனின் கையில் உள்ள தண்டத்தில் உள்ள கிளி அருணகிரியாரின் வடிவமாகப் போற்றப்படுகிறது.இக்கோவில் கருவறையின் அருகே ஒரு சிறிய பேழைக்குள், ஸ்படிகலிங்க ரூபத்தில் உள்ள சிவ-பார்வதியை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக நம்பப்படுகிறது .

பழனியில் பெரியநாயகி கோவிலில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் காட்சி அளிக்கிறார்பழனி செல்பவர்கள் இங்கு உள்ள பெரியவுடயரையும், பெரியநாயகியும் தரிசித்து செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. அப்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார்.

ஆண்டுதோறும் சூரசம்ஹாரத்துக்கு முருகன் மலையில் இருந்து கீழே இறங்கி வருகிறார். மலை கோவில் செல்லும் வழியில் உள்ள இடும்பன் தோளில் மலையை தாங்கிய நிலையில் உள்ளார். இடும்பனுக்கு பூஜை செய்த பிறகே தண்டபாணிக்கு பூஜை நடைபெறும். பழனியில் உற்சவரான முத்துக்குமார சுவாமியை கொண்டு தினமும் தங்க ரத பவனி நடைபெறுகிறது.

பழனியின் தனிச்சிறப்புகள்

பழனி, அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். திருப்புகழில் அருணகிரியார் இந்த பழனி மலை முருகனைத்தான் அதிக பாடல்களில் பாடி உள்ளார். ஆறுபடை வீடுகளில் பழனியில் மட்டுமே அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. பழனி பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது.

பழனி தண்டாயதபாணியை வழிபடுவோம்!

நோய்நொடியற்ற நெடிய ஆயுளை பெறுவோம்!