முருகனின் அறுபடை வீடுகள்-திருச்செந்தூர்

திருச்செந்தூர்- சுப்பிரமணியசுவாமி கோயில் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகின்றது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள திருக்கோயில் இதுவாகும். தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால், செயந்திநாதர் என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் “செயந்தி நாதர்” என்பது செந்தில்நாதர் எனவும், “திருஜெயந்திபுரம்” என்பது, திருச்செந்தூர் எனவும் மருவியது. திருச்செந்தூர் ஆலயம், ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்துRead More