ஶ்ரீராமநவமி-சிறப்புக்களும் பெருமைகளும்

ஶ்ரீராமநவமி என்றால் என்ன? ஶ்ரீராமபிரான் இப்புவியில் அவதரித்த நாளே ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்… இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி வேண்டினர். அப்போது விஷ்ணு பகவான், ‘அஷ்டமி, நவமி இரண்டையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார். அதன்படியேRead More

ஶ்ரீராமநவமி

“ஶ்ரீராமநவமி அன்று விரதமிருந்து வழிபடுவோம்!ஸ்ரீராமரின் அருளை பெற்றிடுவோம்!” ஸ்ரீராம நாமத்தை உச்சரிப்பதால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். ஶ்ரீராமநவமி நாளில் விரதமிருந்து இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு. ஶ்ரீராமநவமி விரதம் மேற்கொள்வதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.